தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், செய்தி தொடர்பு துறை சார்பாக சிவந்தி ஆதித்தனாருக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைப்பதற்காக வருகை தர உள்ளார். அந்த விழாவை தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். இவ்விழாவில், ஒலிம்பிக் விளையாட்டில் பங்குபெறும் இளைஞர்களை ஊக்குவித்து பல்வேறு பரிசுகள் வழங்கப்படும், இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையில், ஸ்டாலின் என்.பி.ஆர் சட்டம் பற்றி போதிய விளக்கம் இல்லாததால் வெளிநடப்பு செய்தது குறித்த கேள்விக்கு, “ஸ்டாலினுக்கு விளக்கம் போதவில்லை என்றால், அவர் அதை படித்து தெரிந்துகொள்வது நல்லது என்பதுதான் எங்களுடைய கருத்து, என்றார்.
இதையும் படிங்க : கொரோனா வைரஸ் அறிகுறி - மதுரை இராசாசி மருத்துவமனையில் இருவர் அனுமதி!