ETV Bharat / state

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிட கோரி வழக்கு: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு என்ன? - மதுரை நீதிமன்றன்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிபதிகள் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 4:13 PM IST

மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, அரசியலில் மட்டும் அல்லாமல் நாடக ஆசிரியர், திரைக்கதை, கவிதைகள் என பல துறைகளில் சிறந்து விளங்கியவர். தகவல் தொழிநுட்ப முன்னேற்றத்திற்கும், இலவச படிப்பு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என பல திட்டத்தை அறிமுகபடுத்தி தமிழ் நாட்டை இந்திய அளவில் முன்னேறிய மாநிலமாக கொண்டுவந்துள்ளார்.

மத்திய அரசுடன் இணைந்து நாட்டில் பல திட்டங்கள் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். எனவே, கலைஞர் கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க முழு தகுதி உள்ளது. கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுகளுக்கு உரிய ஆவணங்களுடன் மனு அளிக்கப்பட்டது. அதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்க பூர்வாலா மற்றும் நீதிபதி குமரப்பன் ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஒன்றிய அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரதமர் அலுவலக பரிந்துரை அடிப்படையில் இந்திய ஜனாதிபதி தான் முடிவு செய்வார்” என தெரிவித்தார்.

அப்போது தனிப்பட்ட ஒரு நபருக்கு பாரத ரத்னா விருது வழங்க நீதிமன்றம் பரிந்துரை செய்ய இயலாது இது நீதிமன்ற அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: "ஆட்சி மாற்றத்திற்கு பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தி போல் செயல்படுகிறது" - ஓபிஎஸ் வழக்கில் நீதிபதி காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.