ETV Bharat / state

தீப்பெட்டி தொழிலாளர்கள் வாழ்வில் தீப ஒளியேற்றுவோம்! - விலை உயர்வு

ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்கு பிறகு வரும் டிசம்பர் மாதம் முதல் தீப்பெட்டியின் விலை ஒரு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது.

matchbox  matchbox rate  matchbox rate raises  matchbox rate raises from one rupees to two rupees  madurai news  madurai latest news  மதுரை செய்திகள்  தீப்பெட்டி  தீப்பெட்டியின் விலை  தீப்பெட்டியின் விலை உயர்வு  தீப்பெட்டியின் விலை உயர்வு  விலை உயர்வு  விலைவாசி
தீப்பெட்டியின் விலை
author img

By

Published : Oct 24, 2021, 2:21 PM IST

மதுரை: ஒவ்வொரு மனிதனின் இன்றியமையாத தேவைகளில் ஒன்று தீப்பெட்டி. உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். அதுபோலத்தான் தீப்பட்டி இல்லையென்றால் அந்த பண்டமே இல்லை. அந்த அளவிற்கு நம் வாழ்வோடு ஒன்றிப்போன தீப்பட்டி கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து ரூ.1 கூட்டப்பட்டு 2 ரூபாய்க்கு விற்பனை ஆக உள்ளது. இந்த உத்தரவு அடுத்த மாதம் டிச.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஒரு தீப்பெட்டி செய்ய 14 மூலப்பொருள்கள் தேவை. அந்த வகையில் தீப்பெட்டி விலை உயர்வு, தீப்பெட்டி தொழிலாளர்கள் மத்தியில் தீப ஒளியை ஏற்றும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்த விலை உயர்வானது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் நமது செய்தியாளர் கருத்து கேட்டுள்ளார்.

வரவேற்கத்தக்க விலை உயர்வு

இது குறித்து மதுரை நாகமலை என்ஜிஜிஓ காலனியைச் சேர்ந்த மளிகைக்கடைக்காரர் தனபாலன் கூறுகையில், “கடந்த 1998ஆம் ஆண்டு எனது பலசரக்குக் கடையைத் தொடங்கியபோது தீப்பெட்டியின் விலை ரூ.1 மட்டுமே. ஆகையால் இந்த விலையேற்றம் தவறே இல்லை. அத்தொழிலை நம்பி வாழ்கின்ற தொழிலாளர் நிலையையும் வாழ்வாதாரத்தையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.

பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது. அதையொட்டி வாடகை உள்ளிட்ட பல்வேறு விலையேற்றம் அடுக்கடுக்காய் நிகழும். 1998-ஆம் ஆண்டு கோல்டு வின்னர் எண்ணெய் பாக்கெட்டுகள் அடங்கிய பெட்டியின் விலை ரூ.220. ஆனால் அதே பெட்டியின் இன்றைய விலை ரூ.1,540. தீப்பெட்டியின் விலையை ரூ.2 ஆக்கினால், அதிலுள்ள குச்சிகளின் எண்ணிக்கை 30லிருந்து 50 ஆக உற்பத்தியாளர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனக் கருதுகிறேன்” என்றார்.

தீப்பெட்டி விலை உயர்வு

பல மடங்கு விலை ஏற்றம்

இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஐயர் என்ற இளைஞர் கூறுகையில், “15 ஆண்டுகளுக்கு முன்னால் பொன்னி அரிசியின் விலை கிலோ ரூ.30. அதே அரிசி இன்றைக்கு ரூ.65. அதேபோன்று தீப்பெட்டி உற்பத்தியாளர்களும் இந்த விலையேற்றத்தைச் செய்வது வரவேற்கத்தக்க ஒன்று.

கூலியாள்களின் நாள்கூலியே இன்றைக்கு நானூறு ரூபாயாக மாறிவிட்டது. டாஸ்மாக் மதுபானங்களின் விலையும்கூட பல மடங்கு விலை ஏற்றம் கண்டுள்ளது. தீப்பெட்டித் தொழிலாளர்களின் வாழ்க்கை சிறப்பதற்காக இந்த விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” என்றார்.

ஒரு ரூபாய் உயர்வு

தீப்பெட்டி நிறுவனத்தின் உரிமையாளர் சாத்தூர் சுப்புராஜ் கூறுகையில், “தீப்பெட்டிக்கான மூலப்பொருள்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. நிலக்கரிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பாஸ்பரஸின் விலை கடந்த சில வாரங்களில் 300 விழுக்காடு உயர்ந்துள்ளது. மெழுகின் விலையும் ஒரு டன்னுக்கு ரூ.8 ஆயிரம் உயர்ந்துள்ளது.

இதற்கான அட்டையின் விலையும் கடுமையாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் 50 பைசாவாக இருந்த தீப்பெட்டியின் விலை ரூ.1 ஆக உயர்த்தப்பட்டது. அதற்குப் பிறகு தற்போதுதான் விலையேறுகிறது” என்றார்.

2 ரூபாய்க்கு 50 குச்சிகள்

மேலும் சுப்புராஜ் கூறுகையில், “ஒரு ரூபாய்க்கு 40 குச்சிகள் வரை ஒரு பெட்டியில் இருக்கும். மூலப்பொருள்களின் கடும் விலையேற்றம் காரணமாக இந்த எண்ணிக்கையை பிறகு 30 ஆகக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகையால் தற்போதைய விலையேற்றத்தில் பொதுமக்களின் ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்காக ரூ.2 விலையில் ஒரு பெட்டிக்குள் தலா 50 குச்சிகள் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். எங்கள் தரப்பில் உற்பத்தி அதிகரித்தாலும் மக்களின் நுகர்வு வெகுவாகக் குறைந்துள்ளது. புகைபிடிப்போர் மட்டுமே எங்களுக்கான முதன்மை நுகர்வோர்களாக உள்ளனர்.

இதற்கிடைய ஏற்றுமதியில் கடும் சிக்கல்களை நாங்கள் எதிர்கொண்டு வருகின்றோம். ஒரு கண்ட்டெய்னருக்கான வாடகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்ந்துவிட்டது. இதுதான் எங்களுக்கு மிகப்பெரிய சறுக்கலாக அமைந்துவிட்டது.

உள்நாட்டு நுகர்வுபோக வெளிநாட்டு ஏற்றுமதி பெருமளவில் கைகொடுத்த நிலையில், அதிலும் பேரிடியை நாங்கள் சந்தித்துள்ளோம். இதன் காரணமாக வருகின்ற டிசம்பர் மாதம் முதல் ரூ.2ஆக விலையேற்றத்தை அறிவித்துள்ளோம்.

உழைப்பின் வலி

சீனாவிலிருந்து வரவேண்டிய வெள்ளை பாஸ்பரஸ் தற்போது இந்தியா வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. மேற்கு வங்காளத்திலுள்ள நிலக்கரி சுரங்கங்களில் பிரச்சினை என்பதால் அங்கிருந்து வரக்கூடிய மூலப்பொருள்களும் வரவில்லை. இதன் காரணமாக தாய்லாந்திலிருந்து நாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை. சீனாவும் தனது நாட்டிற்குத் தேவையான நிலக்கரியை தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்வதால், நமது முழுத்தேவையை தாய்லாந்து நாட்டால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

தற்போது ரூ.2 என்று விலையேற்றத்தை அறிவித்தாலும், மூலப்பொருள் பற்றாக்குறை காரணமாக பெரும் சவால்கள் எங்களுக்கு காத்திருக்கின்றன என்பதுதான் உண்மை. இந்தத் தொழிலில் பொதுமக்கள் வாங்கத் தயாராக இருந்தாலும் முகவர்கள்தான் பெரும் பிரச்சனையாக உள்ளனர். ஒரு தீக்குச்சி உற்பத்தி செய்வதற்கு 28 வகையான மூலப்பொருள்கள் தேவையாக உள்ளன. மேலும் தற்போது 100 நாள் வேலைத் திட்டம் எங்கள் தொழிலுக்கு மிகப் பெரும் இடையூறாகவே உள்ளது.

தீப்பெட்டி தொழிலை நாங்கள் அறிமுகம் செய்யும்போது பனாமா பிளேடும் தீப்பெட்டியும் வெறும் 10 பைசா. ஆனால், தற்போது அந்த பிளேடின் விலை எத்தனை மடங்கு உயர்ந்துள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் எங்களது உழைப்பின் வலி புரியும்” என வேதனையுடன் கூறினார்.

இதையும் படிங்க: பெட்ரோலை துரத்தும் டீசல்.. 100-ஐ தாண்டிய அவலம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.