ETV Bharat / state

மதுரையில் போதை மாத்திரை விற்பனை: ஒருவர் கைது - Crime news

மதுரை: போதை மாத்திரை விற்பனை செய்ததாக ஒருவரை கைதுசெய்த காவல் துறையினர் மற்றொருவரைத் தேடிவருகின்றனர்.

போதை மாத்திரை விற்பனை
போதை மாத்திரை விற்பனை
author img

By

Published : Jun 9, 2021, 8:57 PM IST

மதுரை திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி பகுதியில் போதை மாத்திரையை விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்நிலையில் திருநகர் காவல் நிலைய காவல் துறையினர் ஹார்விபட்டி பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அச்சமயம் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்ததை அடுத்து அவரைப் பிடித்து விசாரித்தனர்.

அவர் நிலையூர் பகுதியைச் சேர்ந்த ஹேம்நாத் என்ற வினோத் என்பதும், அவரது கூட்டாளியான ஹார்விபட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ் உடன் இணைந்து போதை மாத்திரைகள் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து காவல் துறையினர் ஹேம்நாத்தை கைதுசெய்து அவரிடமிருந்த சுமார் 750 போதை மாத்திரைகளையும், விற்பனைக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தினையும் பறிமுதல்செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள ஹேம்நாத்தின் கூட்டாளியான சதீஷை தேடிவருகின்றனர். இரண்டு நாள்களுக்கு முன்பாக மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்பனைசெய்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.