தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் வைகை ஆற்றில் 4,100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் ஓபுளா படித்துறை பாலம் மற்றும் ஏவி பாலம் ஆகிய இரண்டு பாலங்களும் நீரில் மூழ்கியது. வைகையில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் காவல் துறையினர் அறிவிப்பு பலகைகளை வைத்தும், காவலர்கள் ரோந்து பணியிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண்சடலம் ஒன்று மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் இறந்தவர் ஒபுளா படித்துறை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பதும், கொத்தனார் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் இறந்தற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: யூரியா பற்றாக்குறை: பயிரின் வளா்ச்சி பாதிக்கும்; விவசாயிகள் வேதனை
!