மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள தென்பழஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி தங்கபாண்டி (27). இவருக்கு திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றது.
குழந்தை இல்லாத தங்கப்பாண்டி, தனக்கு திருமணமானதை மறைத்து அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தைக் கூறி அவரிடம் பழகி வந்துள்ளார்.
அடிக்கடி மாணவியை தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார். இதனால் எட்டு மாத கால கர்ப்பிணியான மாணவியின் உடலில் மாற்றத்தை கண்ட பெற்றோர் அவரை விசாரித்தபோது அனைத்து உண்மைகளையும் மாணவி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் புகார் அளித்ததன் பேரில், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் தங்கப்பாண்டியை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியைக் கடத்திச்சென்று கட்டாய திருமணம்: இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ!