மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் இன்று வெளியிட்டார்.
பிறகு செய்தியாளரிடம் பேசிய அவர்,
மதுரை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 7 ஆயிரத்து 693 பேர்.
இவர்களில் ஆண் வாக்காளர்கள் 12 லட்சத்து 84 ஆயிரத்து 99 பேர்.
பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 23 ஆயிரத்து 420 பேர். மூன்றாம் பாலினத்தவர் 174 பேர் ஆவர்.
மதுரை மாவட்டத்திலேயே மதுரை கிழக்கு தொகுதியில் அதிகபட்ச வாக்காளர்களாக 3 லட்சத்து 14 ஆயிரத்து 248 பேர் உள்ளனர்.
சோழவந்தான் தனித்தொகுதியில் குறைந்தபட்ச வாக்காளர்களாக இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 54 பேர் உள்ளனர்.
அதேபோன்று அதிகபட்ச பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 772 பேர் மதுரை கிழக்குத் தொகுதியிலும், குறைந்தபட்ச பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 827 பேர் சோழவந்தான் தனித் தொகுதியிலும் உள்ளனர்.
ஆண் வாக்காளர்கள் அதிகபட்சம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 437 பேர் கிழக்கு தொகுதியிலும், குறைந்தபட்ச ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 218 பேர் சோழவந்தான் தனி தொகுதியிலும் உள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர் பொறுத்தவரை மதுரை கிழக்குத் தொகுதியில் 39 பேரும் மேலூர் தொகுதியில் மூன்று பேரும் உள்ளனர்.
இவ்வாறு கூறினார்.