இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனம், மதுரைக்கும் இலங்கைக்கும் இடையே, வியாழன், சனி ஆகிய கிழமைகளில் விமான போக்குவரத்து சேவையை நடத்தி வருகிறது. இலங்கைலிருந்து காலை 9 மணிக்கு மதுரைக்கு வரும் இவ்விமானம், 10.15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும். இந்த சேவையை தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட பலர் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, சுற்றுலாப்பயணிகள் மதுரையிலிருந்து இலங்கை சென்று, அங்கிருந்து மலேசியா, அமெரிக்கா, வளைகுடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மார்ச் 17ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை காலை நேர விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், இலங்கையில் இருந்து வாரத்திற்கு நான்கு நாட்கள் மாலை 3 மணிக்கு மதுரை வந்து, 4 மணிக்கு இலங்கை செல்லும் சேவையானது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் ஒரே நாளில் 26 சர்வதேச விமானங்கள் ரத்து