தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து மத ஆலயங்களும் பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில், கரோனா பரவல் சூழலிலும் கோயில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை, திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வரும் பக்த்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
இதனையடுத்து இன்று (அக்.07) காலை கோயில் உண்டியலில் உள்ள பணத்தை எண்ணும் பணி இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் முன்னிலையில் தொடங்கியது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்தக் காணிக்கை எண்ணும் பணி, சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
தொடர்ந்து, பணி நிறைவுற்றதும் 16 லட்சத்து 33 ஆயிரத்து 477 ரூபாய் ரொக்கப் பணமும், 302 கிராம் தங்கமும் (38.5 பவுன்), 780 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வந்திருப்பதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.