ETV Bharat / state

‘100க்கு 138.. இருந்தாலும் நான் பாஸ் இல்லை’ - 12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் குழப்பம்

author img

By

Published : May 10, 2023, 10:55 AM IST

மதுரையில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த மாணவிக்கு நேற்று முன்தினம் வெளியான தேர்வு முடிவில் தமிழில் 100க்கு 138 மதிப்பெண் எனவும், நான்கு பாடங்களில் அடைந்திருப்பதாகக் குழப்பமான தேர்வு முடிவு வெளியானதால் செய்வதறியாது மாணவி தவித்து வருகிறார்.

‘100க்கு 138.. இருந்தாலும் நான் பாஸ் இல்லை’ - 12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் குழப்பம்
‘100க்கு 138.. இருந்தாலும் நான் பாஸ் இல்லை’ - 12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் குழப்பம்
குழப்பமான தேர்வு முடிவினால் பாதிக்கப்பட்ட மாணவி

மதுரை: தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், நேற்றைய முன்தினம் (மே 8) வெளியானது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தேர்வு எழுதிய 34 ஆயிரத்து 753 பேரில், 16 ஆயிரம் மாணவர்களும், 17 ஆயிரத்து 306 மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சூரக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், வேல்முருகன் (26) - ஆர்த்தி (19) தம்பதி. கடந்த 2021ஆம் ஆண்டில் ஆர்த்தி தனது 17வது வயதில், திருநகர் சீதாலட்சுமி பள்ளியில் 11ஆம் வகுப்பை முடித்துள்ளார். அப்போது, அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வேல்முருகனை திருமணம் செய்துள்ளார்.

இவ்வாறு குழந்தைத் திருமணம் செய்து கொண்டதாக, இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது வரை வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே, தங்களது திருமண வாழ்க்கையினால் படிப்பு கெட்டு விடக் கூடாது என்பதற்காக, வேல்முருகன் தனது மனைவி ஆர்த்தியை நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வைக்க முடிவு செய்துள்ளார்.

இதன் பேரில் திருப்பரங்குன்றம் தேவஸ்தான பள்ளியில் 11ஆம் வகுப்பு முடித்த சான்றிதழைக் காண்பித்து, 2022ஆம் ஆண்டில் பள்ளியில் சேர்த்து பொதுத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வாங்கி உள்ளார். இதனையடுத்து கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஆர்த்தி, திருமங்கலம் செயின்ட் பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளியில் எழுதி உள்ளார்.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் வெளியான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை ஆர்த்தி இணையத்தில் பார்த்துள்ளார். அதில், தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 92, கணிதத்தில் 56, இயற்பியல் பாடத்தில் 75, வேதியியல் பாடத்தில் 71 மற்றும் உயிர் கணிதத்தில் 82 மதிப்பெண்களும் பெற்றதாக முடிவுகள் வெளியாகி உள்ளது.

மேலும், இது தொடர்பாக ஆர்த்தி கூறுகையில், “எனது ஆன்லைன் பொதுத்தேர்வு முடிவுகளைத் திருப்பரங்குன்றம் தேவஸ்தான பள்ளிக்கு எடுத்துச் சென்று காண்பித்தபோது, அவர்கள் எனக்கு உரிய விளக்கம் அளிக்காமல் இருந்தனர். தமிழில் 90 மதிப்பெண்களுக்குத்தான் தேர்வு எழுத முடியும். ஆனால், இவர்கள் 138 மதிப்பெண்கள் அளித்துள்ளனர்.

நான் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் என்னுடைய உண்மையான மதிப்பெண்கள் தெரிந்தால் மட்டுமே என்னால் உயர் கல்வி பயில முடியும். அல்லது மீண்டும் பொதுத் தேர்வு எழுத முடியும். இப்படி எங்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவது போன்ற முடிவுகள் வெளியாகி இருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அதே போல் 600க்கு 514 மதிப்பெண் எடுத்து நான்கு பாடத்தில் தோல்வி என்றும் வந்துள்ளது மிகவும் வேதனையாக இருக்கிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற +2 தேர்வில் முதலிடம் பிடித்த நந்தினி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.