ETV Bharat / state

மதுரை - செங்கோட்டை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

மதுரை - செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ஆகஸ்ட் 30 முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

Train
Train
author img

By

Published : Aug 25, 2021, 8:13 AM IST

இது குறித்து தெற்கு ரயில்வே தெரிவித்ததாவது:

ஆகஸ்ட் 30ஆம் தேதிமுதல் மதுரை - செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வண்டி எண் 06504 மதுரை - செங்கோட்டை விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 10.35 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண் 06503 செங்கோட்டை - மதுரை விரைவு சிறப்பு ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்களில் 12 இரண்டாம் வகுப்புப் பொதுப் பெட்டிகளுடன் இரண்டு சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த தினசரி சிறப்பு ரயில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும்.

இவ்வாறு தென்னக ரயில்வே கூறியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.