ஒன்பது மாத குழந்தை ஆதித்யன் கடும் மூச்சுத் திணறல் மற்றும் விழுங்க இயலாத சிக்கல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை காது மூக்கு தொண்டை பிரிவுக்கு அவரது பெற்றோரால் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி அழைத்து வரப்பட்டார்.
மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்ததில், தொண்டை பகுதியில் அமிர்தாஞ்சன் டப்பா மூடி இருப்பது கண்டறியப்பட்டது.
ஆதித்யன் ஆபத்தான நிலையை அறிந்து மயக்கவியல் மருத்துவரின் ஆலோசனையோடு காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவ தலைவர் மருத்துவர் தினகரன், உதவிப் பேராசிரியர் நாகராஜ குருமூர்த்தி ஆகியோர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் தொண்டையில் இருந்த அமிர்தாஞ்சன் டப்பா மூடியை அகற்றினர்.
தற்போது 9 மாத குழந்தை ஆதித்யன் மிக நலமுடன் அவரது பெற்றோரோடு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தொடர்ந்து இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட குழுவினரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் சங்குமணி பாராட்டினார்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! - தமிழக அரசு வெளியீடு!