திருநெல்வேலி மாவட்டம் அருகே டி.இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் வயிற்று வலியால் நடக்க முடியாமல் கிடந்து உடல்நிலை மோசமான நிலையில் மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது ஒரு லட்சம் மக்களில் ஒருவருக்கு வரும் மிக அரிதான நோயான பாராதைராய்டு என்னும் கட்டி பெண்ணின் வயிற்றுப் பகுதியில் இருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து பொது அறுவை சிகிச்சைத் துறை தலைவர் அமுதா தலைமையில் ஐவர் கொண்ட மருத்துவக் குழு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பஞ்சவர்ணம் வயிற்றில் இருந்த கட்டியை அகற்றினர். தற்போது, அந்த பெண் முற்றிலும் குணமடைந்து நலமாக உள்ளார். பஞ்சவர்ணத்திற்கு அளிக்கப்பட்ட இந்த சிகிச்சை அனைத்தும் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் இலவசமாக மேற்கொள்ளபட்டது.
இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் சுமார் 1.5 லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.