ETV Bharat / state

திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்திய மதுரை பேந்தர்ஸ் அணி! - டிஎன்பிஎல்

மதுரை பேந்தர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் அந்த அணி பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும்

திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி மதுரை பேந்தர்ஸ் 3 வது வெற்றி!

author img

By

Published : Jul 8, 2022, 12:32 PM IST

திண்டுக்கல்: நத்தம் என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதியது. டாசில் வெற்றி பெற்ற மதுரை பேந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி வீரர்கள் தொடக்கத்தில் ரன்கள் எடுக்க தடுமாறினர். 5 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 5 ஓவர்களுக்கு பிறகு நிதானமாக விளையாடி ரன்களை எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தனர்.

தோனி பிறந்த நாள் கொண்டாட்டம்
தோனி பிறந்த நாள் கொண்டாட்டம்

திண்டுக்கல் அணி தரப்பில் அதிகபட்சமாக மோஹித் ஹரிஹரன் 31 பந்துகளில் 43 ரன்களும், ஹரி நிசாந்த் 26 பந்துகளில் 24 ரன்களும், மணிபாரதி 22 பந்துகளில் 18 ரன்களும் எடுத்தனர். மதுரை அணி தரப்பில் சன்னி சந்து 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும், சிலம்பரசன் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

இதையடுத்து மதுரை பேந்தர்ஸ் அணி 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்தது. மதுரை அணி வீரர்கள் தொடக்கம் முதலே விருவிருப்பாக அடித்து ஆடி ரன்களை குவித்தனர். மதுரை அணி 15.3 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மதுரை பேந்தர்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக, அனிருத் 34 பந்துகளில் 51 ரன்களையும், அருண்கார்த்திக் 31 பந்துகளில் 41 ரன்களையும் எடுத்தனர். திண்டுக்கல் அணி தரப்பில் விக்ணேஷ், சிலம்பரசன், தீரன்தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அனிருத் இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இந்த ஆட்டத்தை காண வந்திருந்த ரசிகர்கள் தோனி பிறந்தநாளுக்கு கிரவுண்டில் பேனர் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.

இதையும் படிங்க: இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டி - 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.