ETV Bharat / state

'வாக்காளர்களுக்கு அல்வா' - சுயேட்சை வேட்பாளர் சொன்ன சீக்ரெட் - Madurai North Independent candidate Sankarapandi

வாக்காளர்களுக்கு அல்வா கொடுத்து வாக்குக் கேட்ட சுயேட்சை வேட்பாளரின் செயல் பொதுமக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

'வாக்காளர்களுக்கு அல்வா' - சுயேட்சை வேட்பாளர் சொன்ன சீக்ரெட்

author img

By

Published : Apr 2, 2021, 11:49 AM IST

மதுரை வடக்குத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் சங்கரபாண்டி. தேர்தல் பரப்புரையை தீவிரபடுத்தியுள்ள இவர் ஒரு கையில் அல்வா பாக்கெட் மற்றொரு கையில் முகக்கவசங்களை கொண்டு சென்று பொதுமக்களிடம் கொடுத்து வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

வாக்காளர்களுக்கு அல்வா கொடுத்த சுயேட்சை வேட்பாளர்

இவர் அல்வாவை கொடுத்துவிட்டு "ஊழல்வாதிகளாய் உள்ள வேட்பாளர்களுக்கு நீங்கள் அல்வா கொடுங்கள்" என்று வாக்காளர்களை வலியுறுத்திவருகிறார். மேலும் முகக்கவசம் அணியாத முதியவர்களுக்கு முகக்கவசத்தை மாட்டி விட்டு கரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

முக கவசம் அணிய வலியறுத்தி விழிப்புணர்வு
முக கவசம் அணிய வலியறுத்தி விழிப்புணர்வு

இது தொடர்பாக பேசிய அவர்,"இலவசங்களை நம்பி ஏமாறும் மக்கள் போலி வாக்குறுதி தரும் வேட்பாளர்களைப் புறக்கணிக்க வேண்டும். நேர்மையானவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

அவர்களையே பொதுமக்கள் தேர்வு செய்ய வேண்டும்" என்ற உயரிய நோக்கத்தோடு இந்தப் பரப்புரையை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

மதுரை வடக்குத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் சங்கரபாண்டி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.