ETV Bharat / state

மதுரை மீனாட்சி கோயிலில் அஷ்டமி சப்பர வீதி உலா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் அஷ்டமி சப்பர வீதி உலா இன்று நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அருளாசி பெற்றுச்சென்றனர்.

மதுரை மீனாட்சி கோவிலில் அஷ்டமி சப்பர வீதி உலா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

author img

By

Published : Dec 16, 2022, 3:05 PM IST

Updated : Dec 16, 2022, 3:32 PM IST

மதுரை மீனாட்சி கோயிலில் அஷ்டமி சப்பர வீதி உலா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் புகழ்பெற்ற ஆன்மிக நிகழ்வாகும். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளக்கிறார் என்பது இந்த நிகழ்வின் ஐதீகமாகும்.

சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், சப்பரங்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக சப்பரங்களில் உலா வந்தனர்.

இதில் மீனாட்சி அம்மன் சப்பரத்தை பெண்கள் மட்டுமே முன்னின்று இழுத்துச்செல்வது தனிச்சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள்.

பக்தர்கள், கீழே சிதறிக் கிடக்கும் அந்த அரிசியை சேகரித்து, வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது இன்றளவும் பக்தர்களிடையே நம்பிக்கையாக நிலவுகிறது.

இதையும் படிங்க: மதுரை விமான நிலையத்திற்கு 24×7 தொழில் பாதுகாப்புப்படை: அமைச்சரின் பதிலில் ஏமாற்றம்

Last Updated : Dec 16, 2022, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.