ETV Bharat / state

கோயில் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் - தமிழ்நாட்டில் கோயில் திறப்பு

தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கபடவுள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கோயில் திறப்பு
கோயில் திறப்பு
author img

By

Published : Jul 4, 2021, 5:36 PM IST

மதுரை: தமிழ்நாட்டில் நாளை(ஜூலை 5) முதல் வழிபாட்டுத் தலங்கள் பக்கதர்கள் வழிபாட்டிற்காக திறக்கப்படுகின்றன. கரோனா பெருந்தொற்றின் 2ஆவது அலை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, 80 நாள்களுக்குப்பின் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி தந்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அறநிலையத்துறை வழங்கியுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் வழிபாட்டு நெறிமுறைகள்

அதன்படி, உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோவில் நிர்வாகம் 11 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.

  1. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பக்தர்கள் வழிபாட்டிற்காக 05.07.2021 முதல் காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.
  2. பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பொது தரிசனத்திற்கு அம்மன் சன்னதி கிழக்கு நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் . ரூ .100 / - ரூ .50 / - விரைவு தரிசன கட்டணசீட்டு பெறும் பக்தர்கள் தெற்கு கோபுர நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேற்கு மற்றும் வடக்கு நுழைவு வாயில் வழியாக இத்திருக்கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  3. கோவிட் – 19 காரணமாக பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.
  4. திருக்கோயிலின் தெற்கு, கிழக்கு அம்மன் வாசலில் வெப்பநிலை பரிசோதனைக்குப்பின் அங்கு அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி ஸ்பிரேயர்களை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திய பின்பே திருக்கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
  5. 10 வயதிற்கு குறைவானவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் கர்ப்பிணி பெண்கள் திருக்கோயிலுக்கு வருவதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
  6. சளி , காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் திருக்கோயிலுக்கு வருவதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
  7. திருக்கோயிலில் நடக்கும் காலபூஜைகள் மற்றும் அபிசேகங்களை காண பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  8. திருக்கோயில் வளகத்திற்குள் சமூக இடைவெளி பின்பற்றிட திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் குறியீடு செய்யப்பட்ட சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் தரிசனம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
  9. பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு திருக்கோயிலில் எந்த ஒரு இடத்திலும் உட்கார அனுமதி கிடையாது.
  10. பக்தர்கள் திருக்கோயிலுக்குள் தேங்காய், பழம், கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது . அர்ச்சனை செய்வதற்கு அனுமதி இல்லை.
  11. திருக்கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் வழக்கம்போல் நிர்வாகத்தின் மூலம் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேப்போல் மாநிலம் முழுவதும் முக்கிய கோயில்கள் தங்களின் சூழலுக்கு ஏற்றவாறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளன. பல நாள்களுக்குப் பின் வழிபாட்டுத் தலங்கள் பொது மக்கள் வருகையை எதிர்கொள்வதால் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் இன்று(ஜூலை 4) முழு வீச்சில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.