இன்று முதல் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கிழக்கு கோபுர அம்மன் சன்னதியிலிருந்து தெற்கு கோபுரம் வரை பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து அம்மனை தரிசித்தனர்.
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு விதித்த கட்டுப்பாடுகளின் படி, 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலில் வழங்கப்படும் இலவச லட்டு பிரசாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரணாப் மறைவிற்கு அதிமுக இரங்கல்!