மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் தற்போது ஆனி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் ஐந்தாம் நாள் நேற்று (ஜுன் 19) கொண்டாடப்பட்டது. கரோனா தொற்று காரணமாக கோயில்களின் நடை சாத்தப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், சம்பிரதாய அடிப்படையில் கோயிலின் வளாகத்திற்குள்ளேயே திருவிழா உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஆனி ஊஞ்சல் உற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஊஞ்சலில் அமர்ந்தவாறு அருள்காட்சி தந்தனர்.
“ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்ய ஆட்கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தரகோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம் பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ”
என்னும் எம்பிரான் மணிவாசக பெருமானின் பாடலோடு நேற்றைய விழா நிறைவடைந்தது.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோயில்: ஆனி ஊஞ்சல் உற்சவம் 4ஆம் நாள்!