ETV Bharat / state

மதுரை மீனாட்சி கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் தொடக்கம் - aadi function

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் நேற்று (ஜூலை 12) கோலாகலமாகத் தொடங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன்
author img

By

Published : Jul 13, 2021, 9:17 AM IST

மதுரை: உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம் போன்ற விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு திருக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோயில் திருவிழாக்களில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், ஆடி முளைக்கொட்டு உற்சவ விழா கொடியேற்றம் நேற்று காலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

ஆடி முளைக்கொட்டு உற்சவ விழா கொடியேற்றம்
ஆடி முளைக்கொட்டு உற்சவ விழா கொடியேற்றம்

முளைக்கொட்டு விழா சிறப்பு

ஆடி ஆயில்ய நட்சத்திரம் தொடங்கி கேட்டை நட்சத்திரத்தோடு முடிவடையும் 10 நாள் விழாவான 'முளைக் கொட்டு விழா’ முழுவதும் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் எடுக்கப்படும்.

பண்டை நாட்களில் இந்த விழா முடிந்த பின்புதான் விவசாயப் பெருமக்கள் விவசாய வேலைகளைத் தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விழா, கோயில் ஆடி வீதிப் பிரகாரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் நடைபெறும் குதிரை வாகனக் காட்சி, புஷ்ப விமானக் காட்சி, சைத்யோபசாரக் காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

மதுரை மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன்

சிம்ம வானத்தில் அருள்பாலித்தார்

நேற்று இரவு மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்தில் கோயிலின் உட்பிரகாரமான ஆடி வீதியில் வலம் வந்து அருள்பாலித்தார்.

புறப்பாட்டிற்கு முன்னதாக கோயில் பட்டர்கள் மீனாட்சிக்கு கயற்கண்ணி மாலையில் உள்ள கீழ்கண்ட திருப்பா பாடி போற்றி வணங்கினர். இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன்

"வேஞ்சின மாதி மிகுத்தே
சிதடரை மேவி நிதம்
தாஞ் சிவபூசை செயாதே
திரியெனைச் சார்ந்தருள்வாய்
வாஞ்சிய மாதித் தலந்தோறு
மேவிய வள்ளறனைக்
காஞ்சியிற் பூசிக்குந் தென் கூடல்
வாழுங் கயற்கண்ணியே" என்ற கயற்கண்ணி மாலை பாடல் பாடப்பட்டு நேற்றைய நாள் விழா நிறைவடைந்தது.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் கோயிலில் தூய்மைப் பணியாளர்கள் காலியிடம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.