ETV Bharat / state

Lockup death : பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டு துன்புறுத்தியதில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூ5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Lockup death : பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
Lockup death : பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
author img

By

Published : Dec 10, 2021, 6:31 AM IST

மதுரை:கடந்த 2012ஆம் ஆண்டு ,மதுரை காவல் துறை சட்டவிரோதமாக ஆறு நாட்கள் காவலில் வைத்து சித்திரவாதை செய்ததால், தனது மகன் சரவணக்குமார் இறந்து போனதாகவும்,அதற்குக் காரணமான மதுரைத் திலகர் திடல் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன்,உதவி ஆய்வாளர் காஞ்சனா தேவி ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி புதிய மீனாட்சி நகரைச் சேர்ந்த ஆறுமுகம்,தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஆனால்,குற்றஞ்சாடப்பட்ட இரு காவல் துறை அலுவலர்களும் தாக்கல் செய்த பதில் மனுவில்,போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக புகார் வந்ததால் தான் சரவணக் குமாரை கைது செய்ததாகவும், சிறையில் அடைக்கும் போது அவருடைய காலில் மட்டும் காயம் இருந்ததாகவும், வேறு எந்த காயங்களும் இல்லை என்றும், மாரடைப்புக் காரணமாகவே அவர் இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை ஆணையத்தின் விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில் ,சரவணக்குமார் ஆறு நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்துத் தாக்கப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி,அவரது குடும்பத்திற்கு ரூ.5லட்சம் இழப்பீட்டை ஒரு மாதத்தில் வழங்க உத்தரவிட்டது மனித உரிமை ஆணையம்.மேலும்,சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு எதிராகத் துறைரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இதையும் படிங்க:விக்கி கவுஷல் - கத்ரீனா கைஃப் திருமண புகைப்படம் கசிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.