ETV Bharat / state

வழக்கறிஞர்களும் காவல் துறையினரும் நண்பர்களாக இருங்க! - நீதிபதி அறிவுரை - madurai high court judge gr swaminathan

மதுரை: வழக்கறிஞர்களும் காவல் துறையினரும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

madurai
author img

By

Published : Nov 1, 2019, 10:30 AM IST

நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வேலுச்சாமி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞராக உள்ளார். இவர் 25ஆம் தேதி தனது மகளை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தபோது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக காவல் துறையினர் இவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவரைக் கைது செய்து இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து, மறுநாள் காலை சிவகிரி நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் பிணை கோரி வேலுச்சாமி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமைக் காவலர்கள் சிவராமகிருஷ்ணன், பாலமுருகன் ஆகியோரும் ஆஜராகினர். அப்போது, தலைமைக் காவலர்களிடம் நீதிபதி, வழக்கறிஞரின் வாகனத்தை மதியம் ஒரு மணிக்குள்ளாக (நேற்று) ஒப்படைக்க உத்தரவிட்டார்.

மேலும், தலைமைக் காவலர்கள் இருவரும் மன்னிப்புக்கோரி கடிதம் எழுதி வழக்கறிஞரிடம் அளிக்கவும் தலா ஆயிரத்து ஒரு ரூபாயை வரைவோலையாக எடுத்துக்கொடுக்கவும் நீதிபதி ஆணையிட்டார்.

வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் தங்களின் சீருடை, லத்தி, துப்பாக்கி ஆகியவற்றை நன்மையான விஷயங்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க:‘வக்கீல் கிட்டயேவா...!’ - சீறிய போதை வழக்கறிஞர்: காணொலி வைரல்

Intro: வழக்கறிஞர்களும்- காவல்துறையினரும் நண்பர்களாக இருக்க வேண்டும். காவல்துறையினர் தங்களின் சீருடை, லத்தி, துப்பாக்கி ஆகியவற்றை நன்மையான விசயங்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் - நீதிபதி கருத்து.Body: வழக்கறிஞர்களும்- காவல்துறையினரும் நண்பர்களாக இருக்க வேண்டும். காவல்துறையினர் தங்களின் சீருடை, லத்தி, துப்பாக்கி ஆகியவற்றை நன்மையான விசயங்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் - நீதிபதி கருத்து.

நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ( வேலுச்சாமி)  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞராக உள்ளார். இவர் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். 25ஆம் தேதி வழக்கறிஞர் தனது மகளை மருத்துவமனைக்கு கொண்டு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது,  SVC கல்லூரி அருகே வழக்கறிஞர் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவரை கைது செய்து இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து,  மறுநாள் காலை சிவகிரி நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் ஜாமின் கோரிய மனு விடுமுறைக்கால அமர்வில், அவசர மனுவாக விசாரிக்கப்பட்டு  ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை காவலர்கள் சிவராமகிருஷ்ணன், பாலமுருகன் ஆகியோரும் ஆஜராகினர். அப்போது வழக்கறிஞரின் வாகனத்தை மதியம் 1 மணிக்குள்ளாக அவரின் உறவினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

மீண்டும் மதியம் விசாரணைக்கு வந்தபோது, தலைமை காவலர்கள் இருவரும் மன்னிப்பு கோரி கடிதம் எழுதி வழக்கறிஞரிடம் அளிக்கவும், தலா 1001 ரூபாயை வரைவோலையாக எடுத்துக் கொடுக்கவும் உத்தரவிட்டார்.
தொடர்ந்து வழக்கறிஞர்களும்- காவல்துறையினரும் நண்பர்களாக இருக்க வேண்டும். காவல்துறையினர் தங்களின் சீருடை, லத்தி, துப்பாக்கி ஆகியவற்றை நன்மையான விசயங்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.