மதுரையில் கரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்தவரை தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று(செப்.28) மட்டும் 86 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 124 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி இன்று (செப்.28) ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 16 ஆயிரத்து 442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15 ஆயிரத்து 359 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 387 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 696 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க:
குடும்பத்தகராறு: இரு குழந்தைகளோடு தீக்குளித்து உயிரிழந்த தாய்!