மதுரையில் கரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்தவரை தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது.
மதுரையில் இன்று (செப்.16) மட்டும் 97 பேர் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 15 ஆயித்து 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 14 ஆயிரத்து 405 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 374 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 799 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.