ETV Bharat / state

இந்தி, ஆங்கிலம் மட்டுமே.. தமிழ் இல்லாமல் மதுரை பல்கலைக்கழக விண்ணப்பம்.. மாணவர்கள் அதிர்ச்சி!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மத்திய அரசின் 'சமர்த்' கல்வித் திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படும் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி மொழியை வரவேற்கிறதா மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்?

author img

By

Published : May 6, 2023, 2:27 PM IST

அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் விக்கி கண்ணன் அளித்த பிரத்யேக பேட்டி

மதுரை: தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்ட வரலாறு அரை நூற்றாண்டைக் கடந்துள்ள நிலையில், மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் ஆளுகின்ற பாஜக அரசுகள், அவ்வப்போது தொடர்ந்து பல்வேறு வகையிலும் இந்தித் திணிப்புகளை மேற்கொண்டு வருவதாக தொடர்ந்து தமிழ்நாட்டின் மாநில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசால் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அங்கீகாரத்தோடும், நிதி உதவியோடும் இயங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசு நிதி உதவியோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'சமர்த்' எனும் கல்வித் திட்டத்தின் கீழ் உள்ள படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விண்ணப்ப விபரங்களில் தமிழ் இடம் பெறவில்லை. அதேநேரம் ஆங்கிலமும், இந்தியும் இடம் பெற்றுள்ளது. மேலும், இது குறித்து அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் விக்கி கண்ணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் குறித்து இரண்டு புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன. பல்கலைக்கழகம் சார்பாக 'சமர்த்' என்ற புதிய வலைதளம் ஒன்று கடந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.

இதில் மாணவர், பெற்றோர் மற்றும் சுயவிபரங்கள் குறித்த தகவல்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்யும் வகையிலேயே ஆன்லைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் இடம் பெறவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தொடர்ந்து, குறிப்பிட்ட வலைதளத்தை நாங்கள் ஆய்வு செய்தபோது, சுயவிபரங்களை இந்தியில் பதிவு செய்க எனக் குறிப்பிட்டே அந்தத் தளம் தொடங்குகிறது. அதில் அடிப்படைத் தகவல்களை இந்தியில் மட்டுமே குறிப்பிட முடியும் என இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இது போன்று ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை வடிவமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கையை புறக்கணிக்கும் செயலாகும். அதேநேரம், காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்விக்கான தேர்வு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்த நிலையில், இந்த ஆண்டு எந்த வித முன் அறிவிப்பும் இன்றி அவை குறைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் மட்டுமன்றி, தமிழ்நாட்டிற்கு வெளியிலும் தேர்வு மையங்கள் இருக்கின்ற காரணத்தால், பணி செய்வோர் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு மேற்படிப்பு பயில ஏதுவாக இருந்தது. இந்த கல்வியாண்டில் காமராஜர் பல்கலைக்கழக எல்லைக்குட்பட்ட, அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மட்டும்தான் தேர்வு மையங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்வு நெருங்கி வரும் காலங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

குறிப்பாக விருதுநகர், சிவகங்கை, மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கக் கூடிய தேர்வு மையங்களில் மட்டும்தான் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து விண்ணப்பித்துள்ள மாணவர்கள், குறிப்பிட்ட இந்த மாவட்டங்களுக்கு வந்துதான் தேர்வு எழுத முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை விண்ணப்பிக்கும் போதே இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால், அவர்கள் வேறு ஏதேனும் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் செய்திருப்பார்கள். ஆனால், எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இது போன்ற கடைசி நேர அறிவிப்பை செய்துள்ளதால், அவர்களில் பலர் தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ளனர். இதனை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கருத்திற்கொண்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நியாயத்தைத் தர வேண்டும்” என கூறினார்.

அதேபோல், இது தொடர்பாக பல்கலைக்கழக உயர் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பிப்பதற்கு வசதியாகத்தான் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம். இருந்த போதும் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள துணைவேந்தரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் வன்கொடுமைச் சட்டத்தில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.