இது குறித்து கள்ளழகர் திருக்கோயில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கரோனா வைரஸ் பரவல் காரணமாக வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மே 7ஆம் தேதி வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு திட்டமிடப்பட்ட நிலையில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவிழா இடை நில்லாமல் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் மே 8ஆம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்வு மட்டும் கோயிலின் உள் பிரகாரத்தில் நடைபெறும்.
இதனை பக்தர்கள் www.tnhrce.gov.in என்ற இணைய தளம் மற்றும் youtube மற்றும் facebook ஆகியவற்றில் மட்டும் கண்டு களிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னர் திருமலை நாயக்கர் காலம் முதல் 450 ஆண்டு கால வரலாற்றில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை என ஆன்மிகவாதிகள் தெரிவித்துள்ளனர்.