ETV Bharat / state

மனநலம் பாதித்த இளம்பெண்ணின் 24 வார கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி - இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி

மதுரை: மனநலம் பாதித்த இளம்பெண்ணின் 24 வாரக் கருவை கலைக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதியளித்துள்ளது.

madurai-high-court
madurai-high-court
author img

By

Published : Feb 14, 2020, 7:55 AM IST

சிவகங்கையைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கணவரை இழந்த நான், ஆடு மேய்க்கும் தொழிலை செய்துவருகிறேன். எனது இரண்டாவது மகள் (26) வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். அதனால் அவரை நான் வீட்டைவிட்டு வெளியில் அனுப்புவதில்லை. நான் காலையில் ஆடு மேய்க்கச் சென்றால், மாலையில்தான் வீடு திரும்புவேன்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த காசி என்பவர் எனது மகளைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து அளித்த புகாரின் படி, சிவகங்கை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரைச் சிறையில் அடைத்தனர். தற்போது, என் மகள் 24 வாரக் கருவைச் சுமந்துகொண்டிருக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் என் மகள் குழந்தை பெற்றுக்கொள்வதென்பது இயலாது. எனவே, அவரது வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்றார்.

இம்மனு விசாரணைக்கு வந்தபோது, சிவகங்கை அரசு மருத்துவமனை முதல்வர் தரப்பில் மனுதாரரின் மகள் 24 வாரம் கருவுற்றிருப்பது உறுதி எனவும் அவர் தற்போது கருவைக் கலைப்பதற்கான உடல்தகுதியைப் பெற்றிருப்பதாகவும் பதிலளிக்கப்பட்டது. இவ்வழக்கில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, மனநலம் பாதித்த இளம்பெண்ணின் 24 வார கருவைக் கலைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் சகோதரர் மீதான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.