ETV Bharat / state

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையை ஆய்வு செய்ய ஆணையம் நியமனம்! - mattuthavani

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் மற்றும் காய்கறி சந்தைகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

மாட்டுத்தாவணி சந்தை
மாட்டுத்தாவணி சந்தை
author img

By

Published : Jun 22, 2023, 9:19 PM IST

மதுரை: மதுரையைச் சேர்ந்த பொழிலன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை, மாட்டுத்தாவணியில் காய்கறி சந்தை மற்றும் மலர் சந்தை என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. காய்கறி சந்தையில் 1000க்கும் மேற்பட்ட மொத்த வியாபார கடையும் சில்லறை வியாபார கடையும் உள்ளது. இங்குப் பல்லாயிரக் கணக்கான மக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

இதே போல மலர் சந்தையில் 100க்கும் மேற்பட்ட கடைகள் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் தினசரி 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இடமாகத் திகழ்கிறது. திருவிழா காலங்களில் அதிகப்படியான பொதுமக்களும் வந்து செல்கின்றன.

ஆனால், மாட்டுத்தாவணி இரண்டு சந்தைகளிலும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை குறிப்பாகக் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளும், வாகன நிறுத்தம் செய்வதற்கான இட வசதிகள் இல்லை. இதனால் அங்கு வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு விதமான சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதையும் படிங்க: "ஏசி பஸ் ஸ்டாபில் கருணாநிதி போட்டோவை பெருசா வையுங்க" - தர்ணாவில் ஈடுபட்ட திமுக நபர்.. தருமபுரியில் நடந்த்து என்ன?

எனவே அனைத்து வசதிகளும் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், மதுரையில் செயல்படும் மலர் மற்றும் காய்கறி சந்தைகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், மலர் மற்றும் காய்கறி சந்தைகளில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து நீதிபதிகள், மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் மற்றும் காய்கறி சந்தைகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கறிஞர் ஆணையம் மலர் மற்றும் காய்கறி சந்தைகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: Madurai Railway Station: பாண்டியன் எக்ஸ்பிரஸ் வேண்டும்; மீன் சின்னம் வேண்டாமா? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.