ETV Bharat / state

குழாய் அமைப்பது தொடர்பான அரசின் அறிவிப்பாணை - இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு! - interim stay

சென்னை: ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் அமைப்பதற்காக, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தர
author img

By

Published : May 16, 2019, 9:24 AM IST

தூத்துக்குடியைச் சேர்ந்த கே.செல்லம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்காக ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதுதவிர காற்றாலை அமைக்கவும், ரயில் பாதை அமைக்கவும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு திட்டங்களுக்காக இதுவரை இந்தப் பகுதியில் 1500 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சிப்காட் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் இன்னும் பயன்படுத்தப்படாமல் காலியாகவே உள்ளது.

இந்நிலையில், இந்தியன் ஆயில் அலுவலர்கள் கடந்த மே 6ஆம் தேதி தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்திற்கு வந்து விவசாயிகளிடம் ஆவணங்களில் கையெழுத்து பெற்றதோடு, இழப்பீடு பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட், டிசிடபிள்யூ உள்ளிட்ட பல வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு விநியோகம் செய்வதற்காக பூமிக்கடியில் இயற்கை எரிவாயு குழாய்கள் பதிக்க இருப்பதாகவும், அதற்காக நிலத்தை கையகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆறுகள், கால்வாய்கள், சாலைகள், வனம், பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதிகள், சக்கரைக்கோட்டை பறவைகள் சரணாலயத்தில் பத்து கிலோமீட்டர் தொலைவு ஆகிய பகுதிகளில் இந்த குழாய் அமைக்கப்பட உள்ளது.

எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகை - மதுரை - தூத்துக்குடி ஆகிய வழி தடத்திலேயே குழாய்கள் மூலம் எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழங்கு முறை வாரியத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலான பகுதி இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த சூழலில் முறையான அனுமதி பெறாமல் ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்யும் நோக்கில் இந்தியன் ஆயில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு முறையான சுற்றுச்சூழல் அனுமதியும் பெறப்படவில்லை.

ஆகவே, முறையான அனுமதி பெறாமல் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு வழங்குவதற்கு குழாய் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக 2018 அக்டோபர் 5, 2019 பிப்ரவரி 18 ஆகிய தேதிகளில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு, மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்தும், பெட்ரோலியம் - இயற்கை வாயுத்துறை செயலர், சுற்றுச்சூழல் - வனத்துறை செயலர், பெட்ரோலியம் - இயற்கை வாயு ஒழுங்கு முறை வாரிய செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் அமைப்பதற்காக, விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தூத்துக்குடியைச் சேர்ந்த கே.செல்லம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

 அதில்," தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்காக ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதுதவிர காற்றாலை அமைக்கவும், ரயில் பாதை அமைக்கவும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு திட்டங்களுக்காக இதுவரை இந்தப் பகுதியில் 1500 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 

இங்கு சிப்காட் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் இன்னும் பயன்படுத்தப்படாமல் காலியாகவே உள்ளது.

 இந்நிலையில் இந்தியன் ஆயில் கழக அதிகாரிகள் கடந்த மே ஆறாம் தேதி தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்திற்கு வந்து விவசாயிகளிடம் ஆவணங்களில் கையெழுத்து பெற்றதோடு இழப்பீடு பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட்,  dcw உள்ளிட்ட பல வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு விநியோகம் செய்வதற்காக பூமிக்கடியில் இயற்கை எரிவாயு குழாய்கள் பதிக்க இருப்பதாகவும் அதற்காக நிலத்தை கையகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஆறுகள், கால்வாய்கள், சாலைகள், வனம், பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதிகள், சக்கரைக்கோட்டை பறவைகள் சரணாலயத்தில் பத்து கிலோமீட்டர் தொலைவு ஆகிய பகுதிகளில்  இந்த குழாய் அமைக்கப்பட உள்ளது.

எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகை - மதுரை - தூத்துக்குடி ஆகிய வழி தடத்திலேயே குழாய்கள் மூலம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழங்கு முறை வாரியத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலான பகுதி இந்த பட்டியலில் இடம் பெறவில்லை

இந்த சூழலில் முறையான அனுமதி பெறாமல் ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்யும் நோக்கில் இந்தியன் ஆயில் கழகம் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது இதற்கு முறையான சுற்றுச்சூழல் அனுமதியும் பெறப்படவில்லை.

ஆகவே முறையான அனுமதி பெறாமல் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு வழங்குவதற்கு குழாய் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக 2018 அக்டோபர் 5 மற்றும் 2019 பிப்ரவரி 18ல் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு, மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்தும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத்துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு ஒழுங்கு முறை வாரிய செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.