ETV Bharat / state

அனைத்து அரசு சட்டக்கல்லூரிகளிலும் அம்பேத்கர் படம் வைக்க உயர்நீதிமன்றக்கிளை பரிந்துரை - மதுரை உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டின் அனைத்து அரசு சட்டக்கல்லூரிகளிலும் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப, சட்டக்கல்வி இயக்குநருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை செய்துள்ளது.

அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கர் படம் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரை

author img

By

Published : Aug 18, 2022, 10:13 PM IST

மதுரை: தேனியைச் சேர்ந்த சசிகுமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், தன்னை கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்து தேனி அரசு சட்டக்கல்லூரி முதல்வர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையிலும், சுதந்திர போராட்டத் தலைவர்கள், சமூகத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர் கல்லூரி முதல்வர் அறையில் அம்பேத்கர் உருவப்படத்தை வைக்கவும், பாடங்களை தமிழில் பயிற்றுவிக்கவும் கோரியுள்ளார். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொண்டுள்ளார்.

கல்லூரி முதல்வரிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் வழங்கியுள்ளார். மனுதாரர் ஏற்கெனவே இரண்டு வாரங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தத் தண்டனை போதுமானது என இந்த நீதிமன்றம் கருதுகிறது. தேனி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் அறையிலும் அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்பட்டுவிட்டது.

அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் கட்டமைப்பாளர். சமூக நீதியின் அடையாளம். அவரது பங்கு ஈடு செய்ய இயலாது. ஒவ்வொரு சட்டக்கல்லூரி மாணவருக்கும் அவர் மிகச்சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். சென்னை சட்டக் கல்வியின் இயக்குநர் தமிழ்நாட்டின் அனைத்து அரசு கல்லூரிகளிலும் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்கின்றது.

மதுரைக்கிளை வழக்கறிஞர் நல வாரியத்தின் சார்பில் 10 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மனுதாரர் சட்டப்புத்தகங்களை வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம்பேத்கரின் பொன்மொழியில் மனுதாரர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவற்றில் முதலாவதான "கற்பி"என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நீதிமன்ற அறையில் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம் இல்லை. விரைவில் இது நிவர்த்தி செய்யப்படும்” எனக்குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சிசிடிவி.. மதுரையில் உணவக ஊழியர்கள் மீது தாக்குதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.