ETV Bharat / state

நாகர்கோவில் காசி வழக்கில் சிபிசிஐடி போலீசார் பதில் மனுத்தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! - கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம்

Chennai High Court of Madurai Bench: நாகர்கோவிலில் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதான காசி, சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு வழக்கில், நாகர்கோவில் சிபிசிஐடி போலீசார் பதில் மனுத்தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

chennai high court of madurai bench
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 6:14 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சுஜி என்ற காசி. இவர் சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையிலும், கந்துவட்டிப் புகாரின் அடிப்படையிலும், நாகர்கோவில் கோட்டார், வடசேரி, நேசமணிநகர் காவல் நிலையம், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இது தொடர்பான புகாரில், கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட காசி, பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைதானார். மேலும், காசியின் லேப்டாப் மற்றும் மொபைலில் 400 ஆபாச வீடியோக்கள், 1,900 நிர்வாணப் படங்கள் இருந்ததாக சிபிசிஐடி கூறியுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கில் நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் காசிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் காசி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "எனக்கு எதிராக வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் ஆகியோர் அமர்வில் இன்று(டிச.21) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மேல்முறையீட்டு மனு குறித்து நாகர்கோவில் சிபிசிஐடி போலீசார் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - நான்கு பேரின் காவல் நீட்டிப்பு! நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.