ETV Bharat / state

அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு கரோனா நிவாரண நிதி ரூ. 2000 வழங்க தடை கோரிய வழக்கு - government employees

மதுரை: மத்திய, மாநில அரசு துறைகளில் பணியிலிருப்பவர்கள், அரசு நிறுவனங்களில் பணி புரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் கரோனா நிவாரணத் தொகை ரூ. 2000 வழங்க தடை கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madurai-high-court-corona-relief-fund
madurai-high-court-corona-relief-fund
author img

By

Published : May 12, 2021, 10:58 PM IST

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண தொகையாக ரூ. 4000 வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். முதல் தவணையாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2000 இம்மாதம் வழங்கப்படவுள்ளது.

இந்த நிதி உதவித் திட்டத்தின் நோக்கம் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு போன்றவற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுபவர்களுக்கு பொருளாதார உதவி செய்வது தான்.

அரிசி பெறும் அட்டைதாரர்களில் மத்திய மாநில அரசு அதிகாரிகள், அதன் நிறுவனங்களான மின்சார வாரியம், பி.எஸ்.என்.எல், வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ரயில்வே, போக்குவரத்து, நீதித்துறையினர், அரசு நிதி உதவி பெற்று இயங்கும் கல்லூரிகள், அரசு நிறுவனங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் அனைவருக்கும் சம்பள குறைப்பு இன்றி ஊரடங்கு காலத்திலும் சம்பளம் வழங்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு வழங்கும் இந்த பணத்தைக் கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்தியை பெருக்க, புதிய ஆக்ஸிஜன் ஆலை அமைக்க,ஏற்கனவே இருக்கும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கை எண்ணிக்கை அதிகரிக்க போன்ற ஆக்கபூர்வமான பணிகளுக்கு செலவழிக்கலாம் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மத்திய, மாநில அரசு துறைகள், அரசு நிறுவனங்களில் பணி புரிந்து ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் பயனாளிகளாக உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவித் தொகை ரூ. 2000 வழங்க தடை விதிக்க கோரியும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் சம்பள இழப்பு, வருவாயிழப்பு ஏற்பட்டுள்ள குடும்பங்களுக்கும் கூடுதலாக நிதி உதவி அளிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.