ETV Bharat / state

அரசு பணியில் இருந்து கொண்டு வெளி மாநிலத்தில் சட்டப்படிப்பு ? - மதுரை மாநகராட்சி சட்ட அலுவலருக்கு எதிராக மனு!

மதுரை மாநகராட்சியில் சட்ட அலுவலராக பணியாற்றி வரும் சிவபாக்கியம் என்பவர், முறைகேடு செய்து பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி பழங்காநத்தத்தைச் சேர்ந்த இஸ்மாயில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (அக்.25) விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை பொது நல வழக்குகளை விசாரிக்கும் டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

முறைகேடு பணிநியமனமாக அறிவிக்கக் கோரிய வழக்கு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 10:37 PM IST

மதுரை: பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாநகராட்சியில் நான் பில் கலெக்டராக கடந்த ஓய்வு பெற்றேன். விதிமுறைகளின்படி கண்காணிப்பாளர் அல்லது உயர் அதிகாரி வரை பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் 1992-ல் சிவபாக்கியம் என்பவர் மதுரை மாநகராட்சியில் கருணை அடிப்படையில் சத்துணவு பணியாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1994ஆண்டு அந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார். அன்றைய தினமே அவரை பொதுப்பிரிவில் டைப்பிஸ்ட் ஆக நியமனம் பெற்றார். பின்னர் மாநகராட்சி கண்காணிப்பாளராக பதவி உயர் பெற்றார். 2015-ல் மாநகராட்சி சட்ட அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவரது பதவி உயர்வு நடவடிக்கைகளை தணிக்கைத்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அதுதொடர்பான அறிக்கையில், பொது சுகாதாரப்பிரிவில் பணியாற்றுபவர்களை பொதுப்பிரிவுக்கு மாற்றக்கூடாது என்ற அரசாணை நிலுவையில் இருக்கும் போது, அதை மீறி சிவபாக்கியத்தை பொதுப்பிரிவில் டைப்பிஸ்ட்-ஆக பணியமர்த்தியது எப்படி? என்று ஆதாரங்களுடன் பதில் அளிக்க வேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் கேள்வி எழுப்பி, அவரது பணி நியமனம் தணிக்கை தடைக்கு உட்படுத்தப்படுகிறது என்றும் உத்தரவிட்டனர்.

அடுத்ததாக சிவபாக்கியம், 1997 முதல் 2000ம் ஆண்டு வரை சட்டப்படிப்பு படித்ததாக தெரிகிறது. சட்டக்கல்லூரி வகுப்பில் நேரடியாக பங்கேற்று மட்டுமே படிக்க முடியும். ஆனால் அந்த சமயத்தில் சிவபாக்கியம், அரசுப்பணியில் இருந்து அரசின் சம்பளத்தை பெற்றுள்ளது முரண்பாடாக உள்ளது. இதற்காக அவர் முன்அனுமதியும் பெறவில்லை என்றும் தணிக்கை அதிகாரிகளின் குற்றச்சாட்டு.

அதுமட்டுமல்லாமல் இவருக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்கியதும் அரசாணைக்கு முரணான நடவடிக்கை. எனவே அந்த பதவி உயர்வுக்காக அவர்களுக்கு வழங்கிய ஊதியம் தணிக்கை தடைக்கு உட்படுத்தப்படும் என்றும் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. தனி ஒரு நபரான சிவபாக்கியத்துக்காக, இத்தனை சட்டவிதிமீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆனால் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், என்னைப் போன்ற பலரது வாய்ப்பு பறிபோயுள்ளது. எனவே சிவபாக்கியம் சட்ட அலுவலராக செயல்பட தடை விதிக்க வேண்டும். அவரது நியமனம் செல்லாது என உத்தரவிட வேண்டும். மேலும் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (அக்.25) நீதிபதி விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "அரசு அலுவலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளது. பணி நியமனத்தில் முறைகேடு உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ளது. அரசின் பணம் வீனடிக்கப்படுவதை ஏற்ற கொள்ள முடியாது. மேலும் இந்த மனுவை முன்றாம் தரப்பினர், அதாவது தனி நபர் ஒருவர் தாக்கல் செய்துள்ளார். முக்கிய மனு என்பதால் இதை பொது நல வழக்குகளை விசாரிக்கும் டிவிஷன் பெஞ்ச்-க்கு விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும்" என பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீட் தேர்வை எதிர்க்கும் திமுக அரசு ஒரே பணிக்கு இருத் தேர்வுகளை நடத்துவதா? - ஆசிரியர்கள் தேர்வு விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.