இது தொடர்பாக திருப்பத்தூரைச் சேர்ந்த முகமது ஷாபி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் "2019ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்.
இது தொடர்பாக தேனி மாவட்ட நீதிமன்றத்தில் பிணை (ஜாமின்) கோரி மனு அளித்தேன். அந்த பிணை மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிணை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவன் முகமது இர்பான் நீட் தேர்வின்போது மொரீசியஸ்ஸில் இருந்ததாகவும் அதனால் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை எனவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து முகமது ஷாபியின் பிணை மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.