ETV Bharat / state

ஆவின் தேர்வை ரத்துசெய்ய கோரிய வழக்கு தள்ளுபடி - madurai hc bench reject aavin case

மதுரை: ஆவினில் 62 காலியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கில், தேர்வுசெய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு பணியில் சேர்ந்துவிட்டனர் எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

madurai hc
மதுரைக்கிளை
author img

By

Published : Feb 26, 2021, 10:57 AM IST

மதுரையை சேர்ந்த கணேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், "மதுரை ஆவினில் சுமார் 62 காலிப்பணியிடங்கள் முறையாக நிரப்பப்படவில்லை. பல முறைகேடுகளுடன் அலுவலர்கள் பணம் பெற்றுக்கொண்டு தேர்வு வைக்காமல் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

மதுரை ஆவினில் பணிபுரியம் அலுவலர்கள் துணையுடன் பல ஊழல்கள் நடைபெறுகின்றன. இதுதொடர்பாக தினசரி நாளிதழில் செய்திகள் வெளியிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது குறித்து உயர் அலுவலர்களுக்குப் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, மதுரை ஆவினில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முறையாக அறிவிப்பு வெளியிட்டு, காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோர் பெயர், தேர்வுக்கான ஆன்சர் கீ ஆகியவை முறையாக வெளியிட்டுத் தேர்வு நடத்தி காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (பிப். 25) இந்த மனு தலைமை நீதிபதி, நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் முறையாக அறிவிப்பு வெளியிட்டு எழுத்துத்தேர்வு நேர்முகத்தேர்வு ஆகியவை வைக்கப்பட்டு பணியாளர்கள் தேர்வுசெய்து பணி நியமன ஆணை வழங்கப்பட்டு பணியில் சேர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மனுதாரர் அலுவலர்களை மிரட்டி பணம் பெறும் நோக்கில் ஈடுபட்டதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணி நியமன ஆணை வழங்கப்பட்டு தேர்வுசெய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்துவிட்டனர் எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கடன் காகிதத்தில் ரஜினி பெயரை போத்ராவே எழுதிக் கொண்டார்- கஸ்தூரி ராஜா தரப்பில் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.