ETV Bharat / state

பெரும் விபத்து தவிர்ப்பு; ரயில்வே பெண் ஊழியர்கள் இருவருக்கு விருது!

மதுரை கோட்டத்தில் ரயில் விபத்து ஏற்படாமல் தவிர்த்த இரண்டு பெண் ரயில்வே ஊழியர்களுக்கு கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் விருது வழங்கி பாராட்டினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 7, 2023, 11:34 AM IST

Updated : Feb 7, 2023, 11:54 AM IST

மதுரை: மதுரை கோட்டத்தில் விபத்தை தவிர்த்த இரண்டு ரயில்வே பெண் ஊழியர்களுக்கு கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் விருது வழங்கி பாராட்டினார். ரயில் பாதை சரியாக இருக்கிறதா என கண்காணிக்க கீமேன் (Key Man) பதவியில் உள்ள ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் தினந்தோறும் ரயில் பாதையில் நடந்து சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அவ்வாறு நடந்து செல்லும்போது, ரயில் தண்டவாளத்திற்கும் சிலிப்பர் கட்டைக்கும் இணைப்பாக உள்ள கிளிப்புகளை அடித்து சரி செய்வார்கள்.

இதுபோல கீ மேனாக பணியாற்றிய சிவகாசி ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் சி.சுபா, கடந்த மாதம் ராஜபாளையம் - சங்கரன்கோவில் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை இணைப்பு பற்ற வைப்பு பகுதியில் விரிசல் இருப்பதை கண்டார். உடனடியாக ரயில் பாதை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து ராஜபாளையம், சங்கரன்கோவில் நிலைய மேலாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக செங்கோட்டை - மயிலாடுதுறை ரயிலானது ராஜபாளையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அதேபோல மணப்பாறை - கொளத்தூர் ரயில் நிலையங்கள் இடையே கீ மேனாக பணியாற்றிய ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் கே.வளர்மதி ரயில் பாதையில் பற்ற வைப்பு பகுதியில் விரிசலை கண்டுபிடித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். இதனால், அங்கு ஏற்பட இருந்த பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த இரு பெண் ஊழியர்களுக்கும் மதுரையில் நேற்று (பிப்.6) நடைபெற்ற ரயில்வே பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். முதுநிலைக் கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முதுநிலை கோட்ட பொறியாளர்கள் ஆர்.நாராயணன், பிரவீனா, ஹிருதயேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: "எங்களது போட்டித் தேர்வு மதிப்பெண்களை வெளியிடுக" - திருநர் கூட்டமைப்பு!

Last Updated : Feb 7, 2023, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.