மதுரை: அரசு அலுவலர்கள் வாரந்தோறும் புதன்கிழமைகளில் மிதிவண்டியில் வரவேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவிப்பு வெளியிட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 9) தன்னுடைய வீட்டிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனீஷ் சேகர் மிதிவண்டியில் வந்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதுரையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக வாரத்தில் ஒருநாள் அனைத்து புதன்கிழமைகளிலும் அரசு அலுவலர்கள் மிதிவண்டியில் அலுவலகத்திற்கு வரவேண்டும்.
பூமித்தாயின் மகன்
இயற்கையையும் பூமித்தாயையும் பாதுகாக்க அனைவரும் மதிவண்டியைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக எனது வீட்டிலிருந்து அலுவலகம் வரை மிதிவண்டியில் வந்தேன்" என்றார்.
இதையும் படிங்க: நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கு : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 1 லட்சம் அபராதம்