ETV Bharat / state

பள்ளிவாசல் மயான வேலைகளை செய்ய எதிர்ப்பு - போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பழனி முஸ்லிம் தர்ம பரிபாலன பள்ளிவாசல் மயான வேலைகள் பார்க்க ஏதுவாக பாதுகாப்பு வழங்க காவல் துறையினருக்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரை
உயர் நீதிமன்றம் மதுரை
author img

By

Published : Mar 29, 2022, 9:18 AM IST

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முகமது அலி என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “ பழனியில் முஸ்லிம் தர்ம பரிபாலன பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசல் 85 ஆண்டுகள் பழமையானது.இந்தப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக குழி தோண்டும்போது 4 அடியில் தண்ணீர் வெளிப்படுகிறது.

இதனால் அடக்கம் செய்தவர்களின் உடல் நீண்ட நாள் மக்காமலும், துர்நாற்றம், சுகாதாரம் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் மயான பகுதியின் உயரத்தை அதிகப்படுத்த பழனி நகராட்சியில் அனுமதி பெற்று வாடகை லாரிகள் மூலம் மணல் எடுத்து வந்து மயானத்தின் உயரத்தை அதிகப்படுத்த வேலைகள் தொடங்கியபோது, அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி மற்றும் பாஜகவைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக பிரச்சினை செய்து வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, முஸ்லிம் தர்ம பரிபாலன பள்ளிவாசலிலுள்ள மயான வேலைகள் செய்ய உரிய காவல் துறை பாதுகாப்பு வழங்கி உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, மயான பணிகளை மேற்கொள்ள காவல் துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி வீராங்கனை மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.