மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் நலனுக்காக கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு மருந்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இது குறித்து மதுரை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "கபசுர குடிநீர் அல்லது நிலவேம்பு குடிநீர் பருக வேண்டும். விட்டமின் சி 500 மில்லி கிராம் அல்லது மல்டி விட்டமின் மாத்திரை தினமும் ஒன்று வீதம் பத்து நாட்களுக்கு அருந்த வேண்டும். ஜிங்க் மாத்திரைகள் 150 மில்லிகிராம் தினம் ஒன்று வீதம் 10 நாட்களுக்கு பருகலாம்.
மேலும் மாற்று மருத்துவ முறையான ஹோமியோபதியில் ஆர்சனிகம் ஆல்பம் 30 என்ற மாத்திரையை தினமும் நான்கு வீதம் மூன்று நாட்களுக்கு வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தில் ச்யவன் பிராஷ் லேகியத்தை தினமும் காலை 10 கிராம் வீதம் சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
மேற்கண்ட மருந்துகளை குடியிருப்போர் நலச் சங்கங்கள் தங்களது பகுதியில் உள்ள குடிமக்களுக்கு தெரிவிக்கலாம். மேலும் சந்தேகங்களுக்கு மாநகராட்சி வாட்ஸ்ஆப் எண் 8428425000 மூலம் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குழந்தை வளர்ச்சியைக் கணக்கிடும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்: அமைச்சர் தொடங்கிவைப்பு