தமிழ்நாடு முழுவதும் பாஜகவின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, மதுரை புறநகர் மாவட்டத்தில் புதியதாக இளைஞரணி மாவட்ட மண்டல நிர்வாகிகள் கூட்டம் மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் சிறுபான்மையினரின் இளைஞரணி மண்டலத் தலைவரான தேவகிரி செல்வா என்பவர் மாநில பாஜக தலைவருக்கு துப்பாக்கியை பரிசாக வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை ஐயர் பங்களா பகுதியில் அரசு உரிமம் பெற்று தேவகிரி செல்வா ஏர்கன் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதன் காரணமாகவே பாஜக இளைஞரணித் தலைவர் வினோஜ் செல்வத்திற்கு ஏர்கன் பரிசாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இவரை வரவேற்று மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் இந்தியில் போஸ்டர் ஒட்டப்பட்டதும் மதுரை மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம்: அரசை கேள்விக் கணைகளால் துளைத்த உயர் நீதிமன்றம்