மதுரை: திருநெல்வேலி மாவட்டம் குலவணிகர்குளம் அரசு ஆதி திராவிட விடுதியின் வார்டன்களாக உள்ள சரவணன், நடனசிகாமணி, இகநாசி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று (மார்ச்.12) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, "மனுதாரர்கள் மூவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளைத் தடுக்கும் பிரிவின்கீழ் அமைக்கப்படும் சிறப்புக் குழுவானது, இந்த வழக்கை விசாரித்து நான்கு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மனுதாரர்கள் வழக்கு விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த விசாரணையோடு, மனுதாரர்கள் மீது துறை ரீதியான விசாரணையும் முன்னெடுக்கப்பட வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: ரூ.2 கோடிக்கு மேல் ஊராட்சி தலைவி ஊழல் செய்ததாக உறுப்பினர்கள் குற்றச்சாட்டு