ETV Bharat / state

படிப்பை இடைநிறுத்தம் செய்த மாணவியின் சான்றிதழ்களை தராத கல்லூரி - 10 நாட்களுக்குள் தர உத்தரவு - S Thangapalam

இளநிலை வேளாண் படிப்பை இடைநிறுத்தம் செய்த மாணவியின் சான்றிதழ்களை 10 நாட்களில் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி படிப்பை இடைநிறுத்தம் செய்த மாணவியின் சான்றிதழ்களை வழங்க கெடு

author img

By

Published : May 17, 2023, 10:42 AM IST

மதுரை: தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரைச் சேர்ந்த ஆர்ஷியா பாத்திமா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண் கல்லூரியில் பி.எஸ்சி வேளாண் பிரிவில் சேர்ந்தேன். கரோனா நோய் தொற்றுக் காலத்தில் எனக்கு திருமணம் நடைபெற்றது.

எனது கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், அங்கு செல்ல எனது சான்றிதழ்களை வழங்குமாறு கோரினேன். ஆனால் 2 லட்சம் ரூபாயை செலுத்திய பின்னர் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகம் தெரிவித்து விட்டது. இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே, எனது சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், “அரசு தரப்பில் இடைநிற்றல் கட்டணம் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு முன்பே தெரிவிக்கப்பட்டுவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி சி.வி.கார்த்திகேயன், “மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்க சட்ட அடிப்படையில் ஏராளமான வழிகள் உள்ளன.

கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவரின் சான்றிதழ்களைப் பிடித்து வைக்க எந்த உரிமையும் இல்லை. சான்றிதழ்களை வைத்துக் கொள்ள அவர்கள் கடன் வழங்குவோர் அல்ல. ஆகவே, கல்லூரி நிர்வாகம் 10 வேலை நாட்களுக்கு உள்ளாக மாணவியின் சான்றிதழ்களை வழங்க வேண்டும். கட்டணத்தை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் முன்னெடுக்கலாம்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: Collectors Transfer : 16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை மாற்றம் - வேங்கை வயல் பிரச்சினை விசாரித்த கவிதா ராமு சி.எம்.டி.ஏக்கு மாற்றம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.