ETV Bharat / state

"கச்சத்தீவை மீட்டுக்கொடுங்கள்" - உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு.. நீதிமன்ற உத்தரவு என்ன?

author img

By

Published : Jul 12, 2023, 7:57 PM IST

கச்சத்தீவை மீட்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகள் விலை மதிப்பற்றது அதனை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்துவது வேதனையளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளது.

கட்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: கச்சத்தீவை மீட்டெடுக்கவும், கடந்த மாதம் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை இந்தியா கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி சென்னையை சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. பின்னர் இந்தியா மற்றும் இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையின் படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின் படி பாரம்பரியமாக மீன் பிடிப்பு தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

1983 முதல் 2005 வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என RTI தகவல் உள்ளது. இதுவரை தமிழக மீனவர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை இழந்துள்ளனர். அதன் பின்பு 2013 ஆம் ஆண்டு 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 19ம் தேதி 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டனர். தற்போது ஜூன் 21ஆம் தேதி 22 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 1974 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையை இலங்கை கடற்படையினர் மீறி உள்ளனர்.

எனவே, இடைக்கால உத்தரவாக 22 மீனவர்களை இந்தியா கொண்டுவர உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், 1974 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை என இரு நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கையை ரத்து செய்து கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க உத்தரவிட வேண்டும்” என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில், "இந்திய மீனவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2014 பின் தமிழக மீனவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல" என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், "மத்திய அரசு தரப்பில் இந்திய மீனவர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கின்றனர். ஆனால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் படகு மற்றும் வலைகள் விலை மதிப்பு அற்றவை. அவை இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்படுவது வேதனை அளிக்கிறது. இதே தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது” எனக் கூறி வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பாஜகவுக்கு அடுத்தடுத்து செக்... உத்தரகாண்ட் அரசியல் நிலவரத்தை ஆராயும் ராகுல்... காங். திட்டம் பலிக்குமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.