ETV Bharat / state

10 சக்கர வாகனங்களில் கேரளாவிற்கு கனிமம் கொண்டு செல்வதற்கான இடைக்காலத் தடை நீட்டிப்பு!

Transporting Minerals: தென்காசி மாவட்டம் புளியரை சுங்கச் சாவடியில் 10 சக்கரத்திற்கு மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்காலத் தடையை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 5:35 PM IST

மதுரை: தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அதிக அளவில் மணல் கடத்தலைத் தடுப்பதற்காக, தென்காசி மாவட்டம் புளியரை சுங்கச் சாவடியில் 10 சக்கர வாகனங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்ல தடை விதித்ததை ரத்து செய்யக் கோரி, கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த இந்தியன் டிரைவர்ஸ் சொசைட்டி பொதுச் செயலாளர் நாகராஜ், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “கேரளா மற்றும் தமிழ்நாடு முழுமைக்கும் வாகனங்களை இயக்குகிறோம். கேரளாவின் பெரும்பகுதி மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், பெரும்பாலான பகுதி சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதனால் குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நடக்கும் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்குத் தேவையான கிராவல் ஜல்லி கற்கள், எம் சாண்ட் குவாரி தூசி மற்றும் மணலுக்கு தமிழ்நாட்டின் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தையே சார்ந்துள்ளோம். தமிழ்நாட்டின் உதவியின்றி கேரளாவின் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது.

ஜி.எஸ்.டி நடைசீட்டு உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகளின் உரிய அனுமதியுடன்தான் தமிழ்நாட்டில் இருந்து கனிமங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் புளியரை செக்போஸ்ட் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் புளியரை இன்ஸ்பெக்டர் மற்றும் கனிமவன அதிகாரிகள் உள்ளிட்டோர், 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிமங்கனைக் கொண்டு செல்ல மறுக்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் புளியரை களியக்காவிளை, தேனி மாவட்டம் கம்பம் மெட்டு மற்றும் கோவை மாவட்டம் வாலையார் செக்போஸ்ட்டுகளில் இந்த வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. புளியரை செக் போஸ்ட்டை மட்டும் நம்பி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பல்லாயிரம் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இருந்து 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் புளியரை சோதனைச் சாவடி வழியாக கனிமங்கள் கொண்டு செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று (செப்.26) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, தென்காசி புளியரை 10 சக்கரத்திற்கு மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் கவுன்சிலர் கார் மோதி உயிரிழப்பு..! சாலையோர கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.