ETV Bharat / state

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் விஜய்க்கு கார் பரிசு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வீரர் விஜய்க்கு, முதலமைச்சர் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. 2-வது மற்றும் மூன்றாவது இடம் பிடித்த வீரர்களுக்கு, பசுமாடும் கன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடித்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு

author img

By

Published : Jan 15, 2023, 7:12 PM IST

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடித்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு

மதுரை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை எழுந்து சூரிய உதயத்திற்கு முன் புத்தாடை அணிந்து பொங்கலிட்ட பொது மக்கள் அதை சூரியபகவானுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது, ஜல்லிக்கட்டு.

மதுரை அவனியாபுரத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். 11 சுற்றுகளாக நடைபெற்ற போட்டி சுவாரஸ்ய மிகுதி காரணமாக கடைசி 30 நிமிடங்கள் கூடுதலாக நீட்டிக்கப்பட்டு விமரிசையாக நடைபெற்றது.

கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த இளைஞர் விஜய், 28 காளைகளைப் பிடித்து முதல் இடம் பிடித்தார். 17 காளைகளை பிடித்து அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் 2-வது இடமும், விளாங்குடியைச் சேர்ந்த பாலாஜி 13 காளைகளை பிடித்து 3-வது இடமும் பெற்றனர்.

முதல் இடம் பிடித்த இளைஞர் விஜய்க்கு சிறந்த மாடுபிடி வீரருக்கான கோப்பை மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய், தமிழக மின்வாரியத்தில் கேங் மேனாக பணியாற்றி வருகிறார்.

அதேபோல் சிறந்த காளைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டு மற்றும் மூன்றாம் இடங்கள் பிடித்த வீரர்கள் மற்றும் காளைகளுக்கு, பசுவும் கன்றும் பரிசாக வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டம், காத்தனேந்தலைச் சேர்ந்த காமேஷ் என்பவரின் காளை முதல் இடமும், வில்லாபுரம் கார்த்திக் என்பவரின் காளை இரண்டாம் இடமும், அவனியாபுரம் முருகன் என்பவரின் காளை மூன்றாம் இடமும் பெற்றன. மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் சார்பில் பசு மற்றும் கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

இன்று(ஜன.15) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவம் பொறித்த தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

மேலும் போட்டியில் கலந்து கொண்டு காளைகளைப் பிடித்து வீரத்தைக் காட்டிய இளைஞர்கள் மற்றும் வீரர்களின் கிடுக்குபிடியில் தப்பி வெற்றி பெற்ற காளைகளுக்கு அண்டா, வேட்டி, சைக்கிள், பீரோ, மிக்ஸி, பிளாஸ்டிக் நாற்காலி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்கள் 61 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் 17 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரியிலேயே முதல் "எருது விடும் விழா": 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.