ETV Bharat / state

மேளதாளங்கள் முழங்க, சீர்வரிசையுடன் பொங்கல் கொண்டாடிய மதுரையிலுள்ள கல்லூரி மாணவர்கள்! - மதுரை செய்திகள்

Pongal celebration: மதுரை அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்கள்,மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை சுமந்து, பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடினர். இது குறித்த விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

pongal celebration
பொங்கல் கொண்டாட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 6:10 PM IST

Updated : Jan 13, 2024, 8:27 PM IST

மேளதாளங்கள் முழங்க, சீர்வரிசையுடன் பொங்கல் கொண்டாடிய மதுரை கல்லூரி மாணவர்கள்!

மதுரை: மதுரை மாவட்டம், கருமாத்தூர் அருகே உள்ளது அருள் ஆனந்தர் கல்லூரி. இதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இங்குதான் பயில்கின்றனர். கிராம மக்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இக் கல்லூரி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.

பொதுவாகவே மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தாய்மாமன் முறை என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று தாய்மாமன் சீர் என்றால் அதன் மரியாதையும், சமூக கௌரவமும் அதிக கவனம் பெறுவது வழக்கம்.

அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கல்லூரி மாணவ, மாணவியர் பொங்கல் திருநாளைச் சீர்வரிசை சுமந்து வந்து கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பூ, சூடம், பத்தி, சுக்கு, ஏலக்காய், கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள் கிழங்கு, கரும்பு ஆகியவற்றுடன் குத்துவிளக்கு, தாம்பாளத்தோடு, பித்தளைப் பானை, மண்பானை ஆகியவற்றைத் தலைச்சுமையாகச் சுமந்து வந்து பிறகு பொங்கலிடுகின்றனர்.

பொங்கல் பொங்கும்போது குலவையிட்டு வழிபாடும் செய்கின்றனர். இந்நிலையில் தைத் திருநாளை முன்னிட்டு இன்று (ஜன.13) வெகு சிறப்பாகப் பொங்கல் சீர் சுமந்து கொண்டாடி மகிழ்ந்தனர். கல்லூரியின் அதிபர் அருட்தந்தை ரெக்டர், அருளானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து இந்த ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். பட்டு வேட்டி, பட்டுச் சேலை அணிந்த மாணவ, மாணவியர் தங்களது பொங்கல் சீர்வரிசையைச் சுமந்து பறை இசை முழங்க ஊர்வலமாய்ச் சென்றனர்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்பரசு கூறுகையில், 'அனைத்து உயிர்களும் சமமானவை என்ற தத்துவத்தைச் சொல்லக்கூடிய ஒரு நிகழ்வுதான் தமிழர்களின் பொங்கல் திருநாள். இயற்கை உள்ளிட்ட பல்லுயிர்களையும் போற்றி வணங்கக்கூடிய தினமாகும். அதேபோன்று அனைவருக்கும் நன்றி சொல்லக்கூடிய ஒரு நாளாகவும் இது அமைகிறது.

பல ஆயிரம் ஆண்டுகளாகப் பொங்கல் திருநாள் நம் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நமக்கு இயற்கை கொடுத்ததை மீண்டும் திரும்பக் கொடுக்க வேண்டும் என்கின்ற உணர்வை மாணவர்களுக்குள் ஏற்படுத்துவதற்காகப் பொங்கல் சீர் அவர்களாலேயே கொண்டு வரப்பட்டு, பொங்கலிட்டு அனைத்து உயிர்களுக்கும் படைக்கிறார்கள்' என்றார்.

பொருளாதாரத் துறையின் தலைவர் முனைவர் ஜெயராஜ் கூறுகையில், ' இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் கல்விப்பணியோடு சமூக மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கிராமப்புற மாணவர்களுக்காகவே இயங்கி வரும் இந்தக் கல்லூரி தற்போது பொன்விழாவைக் கொண்டாடி முடித்துள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு இங்குள்ள 15க்கும் மேற்பட்ட துறைகளில் பொங்கல் திருவிழா தனித்தனியே கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு அங்கமாகத்தான் இந்த சீர்வரிசை கொண்டு வரும் திருவிழா நடைபெறுகிறது. நமது கிராமப்புறங்களில் நிகழும் சீர்வரிசையை மாணவ, மாணவியர் இங்குப் பொங்கலை ஒட்டி நிகழ்த்தியுள்ளனர்.

ஜாதி, மதம், இனம், மொழி பாகுபாடற்ற வகையில் நடைபெறும் பொங்கல் திருவிழாவை மாணவ, மாணவியரே முன்னின்று நடத்துகின்றனர்' என்றார். இளங்கலை பொருளியல் 2-ஆம் ஆண்டு பயிலும் ராம் சஞ்சய் கிருஷ்ணா கூறுகையில், 'இங்கு அனைத்துத் திருவிழாக்களும் எந்தவித பாகுபாடின்றி சமமாகக் கொண்டாடப்படுவதை நான் மிகுந்த வியப்புடன் பார்க்கிறேன்.

அதன் தொடர்ச்சியாக, நடைபெறும் தமிழர் திருநாள் கொண்டாட்ட நிகழ்வு, வேறுபாடின்றி சீர் வரிசை சுமந்து வந்து கல்லூரியின் சமத்துவ நோக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது என்பதில் எனக்குப் பெருமை' என்கிறார். முதுகலை வேதியியல் பயிலும் அனிதா கூறுகையில், 'எங்கள் கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு கொண்டாட்ட நிகழ்வென்றால் அது பொங்கல் திருவிழாதான்.

அனைவரும் பாரம்பரிய உடையோடு தமிழர் திருநாளைக் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. மிக மிக வித்தியாசமான போட்டிகளில் மாணவ, மாணவியர் அனைவரும் ஒன்றுபட்டுப் பங்கேற்கிறோம். எங்கள் கல்லூரியில் நடைபெறும் சீர்வரிசை எங்களுக்கெல்லாம் பெருமை தரக்கூடிய ஒன்று' என்றார்.

இதையும் படிங்க: அலுவலர்களுடன் இணைந்து நடனமாடிய கோவை ஆட்சியர் கிராந்தி குமார்.. பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம்!

Last Updated : Jan 13, 2024, 8:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.