ETV Bharat / state

’சிறைச்சாலை மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை’ - தென்மண்டல ஐஜி - சிறைச் சாலை மரணங்கள்

மதுரை: சிறைச்சாலையில் நிகழும் மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை, காவல்துறையின் நிலைபாடும் அதுதான் என தென்மண்டல ஐஜி முருகன் தெரிவித்துள்ளார்.

Southland IG
Southland IG
author img

By

Published : Jul 2, 2020, 5:32 PM IST

தென்மண்டல காவல்துறை தலைவராக முருகன் இன்று (ஜூலை 2) மதுரையில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஐஜி முருகன், “சிறைச்சாலை மரணங்கள் என்பது தவிர்க்கப்பட வேண்டியவை. இது குறித்து காவலர்களுக்கு போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றினாலே போதுமானது.

இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்கலாம். ஒரு சிலர் செய்யும் தவறு அனைவரையும் பாதிக்கிறது. குற்றத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை பாதுகாக்காது, சட்டம் தன் கடமையை செய்யும். தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான மோதல்கள் 1990களில் இருந்த அளவிற்கு தற்போது இல்லை. காவல்துறையின் கடுமையான நடவடிக்கையால் குறைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

தென்மண்டல ஐஜி முருகன் பேசிய காணொலி

அனைத்து மாவட்ட எஸ்.பி., மற்றும் டிஐஜியுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்படும். சைபர் கிரைம் குற்றங்கள் தற்போது தனிநபர் குற்றங்களாக மாறி உள்ளன. மின்னஞ்சல் வழியாக புகார் அளித்தால் போதும் அந்தந்த காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். அரசு விதிப்படி 48 மணி நேரம் காவலில் இருந்தாலே காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். சாத்தான்குளம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட காவலர்களுக்கும் இது பொருந்தும். நான் பதவி ஏற்பதற்கு முன்பாகவே சாத்தான்குளம் சென்று நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினேன். தற்போது மீண்டும் சாத்தான்குளம் செல்லவிருக்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க:சாத்தான்குளம் விவகாரம்: கைது நடவடிக்கை கண் துடைப்பாக இருக்கக்கூடாது - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.