மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கிவருகிறது. இதில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மதுரையைச் சேர்ந்த 153 பேர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு பேர் என 157 பேர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இது அதிக அளவாகும்.
தற்போது வரை 849 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 389 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
452 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். சுகாதாரத்துறையின் புள்ளிவிவரத்தின்படி தற்போது வரை 8 பேர் கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது கரோனா தொற்று அதிகரிப்பதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... ஊரடங்கு : மதுரையில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்!