ETV Bharat / state

மதுரை மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனைக் கைதி தப்பியோட்டம்!

Aquest escaped from Madurai Jail: மதுரை மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனைக் கைதி ஜெயக்குமார் தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Aquest escaped from Madurai Jail
சிறையிலிருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 10:39 AM IST

மதுரை: தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர், ஜெயக்குமார். இவர் கொலை குற்ற வழக்கில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்து வந்துள்ளார். தற்போது அவருடைய நன்னடத்தை நடவடிக்கைகள் காரணமாக, கடந்த சில மாதங்களாக சிறை வளாகத்தில் தோட்ட வேலைகள் செய்ய அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (நவ.29) மதியம் சிறை வளாகத்தினுள் உள்ள தோட்ட வேலையில் ஜெயக்குமார் உள்ளிட்ட சில சிறைக் கைதிகள் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், வேலை முடிந்து மாலை சிறைக்குச் செல்லும்போது, அதில் ஜெயக்குமாரை மட்டும் காணவில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவலறிந்த சிறைக் காவலர்கள், அவரை அங்குள்ள பகுதி முழுவதும் தேடியுள்ளனர்.

ஆனால் ஜெயக்குமார் எங்கும் கிடைக்காததால், சிறையில் இருந்து அவர் தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. உடனே, இது குறித்து சிறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரிமேடு போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் கைதி ஜெயக்குமாரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: “நடிகை குஷ்பு அனாவசியமாக பேசுகிறார்”.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.