ETV Bharat / state

கொடைக்கானல் படகு குழாம் விவகாரம் - நிலுவையிலுள்ள வழக்குடன் பட்டியிட மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: கொடைக்கானல் படகு குழாம் தொடர்பாக ஏற்கனவே நிலுவையிலுள்ள வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

HC madurai bench
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
author img

By

Published : Mar 12, 2020, 9:17 AM IST

கொடைக்கானல் படகு குழாம் கௌரவச் செயலாளர் ராமச்சந்திர துரைராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்," கொடைக்கானல் போட் கிளப் சார்பில், கடந்த 1906 அக்டோபர் 12-இல் 6 சென்ட் நிலம் தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டது.

பின்னர், 1921இல் அரசிடம் 49 ஆண்டு கால குத்தகைக்கு 8 சென்ட் நிலம் பெறப்பட்டது. அந்த நிலத்தில் கொடைக்கானல் ஏரியில் படகு விடுவதற்காக படகு குழாம் கட்டப்பட்டது.

ஒவ்வொரு 49 ஆண்டுகளின் போதும் குத்தகை காலம் முறையாக நீட்டிக்கப்பட்டது. கொடைக்கானல் போட் கிளப்பில், தற்போது 1,153 உறுப்பினர்கள் உள்ளனர்.

கொடைக்கானல் போட் கிளப்பை ஒலிம்பிக் சங்கமே, கடந்த 129 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் ஏரியில் இயங்கும் படகுகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும் என, 1987இல் நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு, படகு குழாமுக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் கொடைக்கானல் ஏரியை நகராட்சி வசம் ஒப்படைத்து, 2009 ஜூன் 26ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஏரியில் மீன்பிடிப்பதற்கான உரிமம் மீன்வளத்துறை இடம் இருந்தது.

இதனால் மீன்பிடி துறையிடம் அனுமதி பெற்று படகுகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொடைக்கானல் நகராட்சியும், மீன் வனத்துறையும் பகிர்ந்து கொண்டன.

கொடைக்கானல் ஏரியை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டது.

ஏரியில் தற்போது 258 படகுகள் இயக்கப்பட்டன. கொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்குவது தொடர்பாக படகுகளை பதிவு செய்ய, உரிமம் பெறவும் உரிய வழிகாட்டுதல்கள் இல்லை.

இதன் காரணமாக, அரசு, தனியார் நிறுவனங்கள் சார்பில் படகுகளை இயக்குவதற்கு உரிமம் பெறுவது, பதிவு செய்வது செய்வது தொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அதுவரை கொடைக்கானல் படகு குழாமின் 30 படகுகளை கொடைக்கானல் ஏரியில் இயக்குவதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கொடைக்கானல் படகு குழாம் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: தூக்குத் தண்டனைக் கைதிகளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.